செய்திகள் :

ஹரியாணா: செங்கல் சூளையின் சுவர் இடிந்ததில் 4 குழந்தைகள் பலி!

post image

ஹரியாணாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள புடானா கிராமத்தில் செங்கல் சூளையிள் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.

நார்நாவுண்ட் காவல் நிலையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இறந்தவர்கள் நிஷா(3 மாதங்கள்) சூரஜ் (9) நந்தினி (5) மற்றும் விவேக் (9) என அடையாளம் காணப்பட்டனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் குடும்பங்கள் புடானாவில் உள்ள செங்கல் சூளையில் வேலைசெய்து வருகின்றனர்.

சிம்னி அருகே செங்கல் தயாரித்து தூண்கள் அமைக்கும் பணி சூளையில் நடந்து வருகிறது. செங்கல் சூளையின் சுவர் அருகே குழந்தைகள் மற்றும் சில தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​செங்கல் சூளையின் சுவர் அவர்கள் மீது இடிந்து விழுந்தது.

சூரஜ், நந்தினி மற்றும் விவேக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், நிஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

கௌரி என்ற 5 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் ஹிசார் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐந்து குழந்தைகளும் உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள பதாவ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஒவ்வொரு குடிமகனையும் காப்பது அரசின் கடமை: கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர்!

இந்திய கத்தோலிக்க பேராயர்கள் பேரவை சார்பில் இன்று(டிச. 23) ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். புதுதில்லியில் உள்ள சிபிசிஐ மைய வளாகத்தில் மாலை... மேலும் பார்க்க

பழைய கார்களின் விலை உயருமா? ஜிஎஸ்டி உயர்கிறது..!

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி, பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், துணை முதல்... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்: 2025 பிப். 1, சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும்!

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிக்கப்படும் நாளான சனிக்கிழமை பங்குச் சந்தை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி (சனிக்கிழமை) அறிவிக்கப்படவுள... மேலும் பார்க்க

தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நியமனம்!

தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல் காந்தி!

மகாராஷ்டிரத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் கடந்த டிச. 10 ஆம் தேதி அம்பேத்கர் சிலை அர... மேலும் பார்க்க

வங்கதேச முன்னாள் பிரதமரை நாடு கடத்த மத்திய அரசிடம் வங்கதேசம் வலியுறுத்தல்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது.வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரங்களுக்குப்பின் அமைந்துள்ள இடைக்கால அரசு, தூதரக ரீதியாக இந்தியாவிடம் இது குறி... மேலும் பார்க்க