ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த தினேஷ் கார்த்திக்..! டு பிளெஸ்ஸி அதிரடியால் வென்ற ஜேஎஸ்கே!
எஸ்ஏ20 தொடரில் தினேஷ் கார்த்திம் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்திய தினேஷ் கார்த்திக் தனது முதல் அரைசதத்தினை பதிவு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் அணி 20 ஓவர் முடிவில் 150/9 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
Dinesh Karthik goes boom #BetwaySA20#JSKvPR#WelcomeToIncredible | @DineshKarthikpic.twitter.com/OrdBdo4pp2
— Betway SA20 (@SA20_League) January 30, 2025
ஜேஎஸ்கே அணி சார்பில் டோனவன் பெரேரா, சிபம்லா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
அடுத்து விளையாடிய ஜேஎஸ்கே அணி 17.5 ஓவரில் 151/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதில் கேப்டன் டு பிளெஸ்ஸி 55 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும்.
புள்ளிப் பட்டியலில் தினேஷ் கார்த்திக் அணி முதலிடத்தில் இருக்கிறது. 2ஆம் இடத்தில் மும்பை கேப்டௌன், 3ஆம் இடத்தில் ஜேஎஸ்கே அணி இருக்கிறது.
முதலிரண்டு அணிகள் ஏற்கனேவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. மீதமிருக்கும் 2 இடங்களுக்கு ஜேஎஸ்கே, சன்ரைசர்ஸ், பிரிடோரியா கேபிடல்ஸ் அணிகள் போட்டி போடுகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் முதல்முறையாக எஸ்ஏ20 தொடரில் விளையாடுகிறார். முதல் அரைசதமும் வீணாகியது தமிழக ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
What a Knock From Skipper Faf #SA20#SA20League#FafDuPlessis#WhistlesForJoburgpic.twitter.com/uOm8PreqWX
— CSK (@cskku6podu) January 30, 2025