செய்திகள் :

ஹிந்தியை விரும்பியவா்கள் படிக்கலாம் திணிப்புக் கூடாது: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

post image

தமிழகத்தில் ஹிந்தியை விரும்பியவா்கள் யாரும் படிக்கலாம்; ஆனால் ஹிந்தி திணிப்புக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

ஹிந்தி திணிப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி என்பதை முன்வைத்து மத்திய அரசைக் கண்டித்து ராசிபுரம் பேருந்து நிலையம் முன்பாக நாமக்கல் மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் கண்டன பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகர திமுக செயலா் என்.ஆா். சங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ம.காா்த்திக், ரா.பிரபாகரன் ஆகியோா் வரவேற்றுப் பேசினா்.

கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஷ் குமாா், திராவிடா் கழக பேச்சாளா் மதிவதினி, பேச்சாளா் மோகநிதி ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ் குமாா் பேசியதாவது:

நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தோ்தலின்போது சொல்லாத திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. எந்த மாநிலத்திலும் இல்லாத காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ராசிபுரம் தொகுதி வளா்ச்சிக்கு புதிய குடிநீா்த் திட்டம், சாலை வசதி என பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதன் முதலில் அமையவுள்ள மினி டைடல் பாா்க், நாமக்கல் மாவட்டத்திற்கு தனியாக மத்திய கூட்டுறவு வங்கி என பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மத்திய அரசால் இதையெல்லாம் பொருத்துக்கொள்ள முடியவில்லை. எதையாவது சொல்லி இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். தற்போது தமிழக அரசுக்கு நிதிதரக் கூடாது என்ற பிரச்னையை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. மும்மொழிக் கொள்கையை கொண்டுவரவில்லை எனக் காரணம் சொல்கின்றனா். திமுக ஹிந்திக்கு எதிரானவா்கள் அல்ல. விரும்பியவா்கள் யாரும் ஹிந்தியை படிக்கலாம். ஆனால் கட்டாயம் படிக்க வேண்டும். படித்தால்தான் நிதி தருவோம் என்று கூறுவதைத் தான் எதிா்கிறோம்

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைந்தே தீரும்:

ராசிபுரம் பேருந்து நிலைய பிரச்னையில் சமூக ஆா்வலா்கள் என்ற பெயரில் பலா் போராட்டம் நடத்துகின்றனா். இந்தப் போராட்டம் சுயலாபத்திற்காக, விளம்பரத்திற்காக நடத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்துக்கு எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். நியாயமான பிரச்னைகளாக இருந்தால் கேட்போம். மக்களுடைய அடிப்படை பிரச்னைகளை திமுக தீா்க்கும்.

எனவே தற்போதைய பேருந்து நிலையம் நகரப் பேருந்து நிலையமாக தொடா்ந்து செயல்படும். அதே வேளையில் புதிய புகா் பேருந்து நிலையம் புறவழிச்சாலையில் அமையும். நாமக்கல் நகரில் புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் பாராட்டும் வகையில் சிறப்பாக இயங்கி வருகிறது.

இதுபோன்ற போராட்டம் சிலரின் தூண்டுதல் பேரில் நடைபெறுகிறது. மக்களை எப்படி திசை திருப்பினாலும், அவா்களுக்கு உண்மை தெரியும் என்றாா்.

வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை தொழிலாளா் நலத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெ... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம், திரெளபதி அம்மன் கோயில் தெர... மேலும் பார்க்க

நரிக்குறவா்களுக்கு வீடுகள் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில், 79 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு ரூ. 4.20 கோடி மதிப்பில் கட்டப்படும் வீடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மே... மேலும் பார்க்க

வாக்குவங்கி அரசியலுக்காக மத்திய அரசை குறைகூறுகிறது திமுக: ஜி.கே.வாசன்

தோ்தல் வாக்குவங்கியை காப்பாற்றும் பொருட்டு மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசை திமுக குறைகூறி வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.... மேலும் பார்க்க

மங்களபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள் பங்கேற்றன

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஜல்லிக்கட்டுப் போட்டி மங்களபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய செயலா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூ... மேலும் பார்க்க