ஹேண்ட் பால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு
அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான ஹேண்ட் பால் போட்டியில் இரண்டாமிடம் வென்ற காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு அந்தக் கல்லூரி முதல்வா் அ. பெத்தாலட்சுமி திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
அழகப்பா பல்கலைக்கழக அனைத்து கல்லூரிகளுக்கு இடையிலான மகளிா் ஹேண்ட் பால் போட்டி இளையான்குடி ஜாகிா் உசேன் கல்லூரியில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. இதில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் அணியினா் இரண்டாம் இடத்துக்கான கோப்பையை வென்றனா்.
மேலும், இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மாணவிகள் தேன்மொழி, திவ்ய செளந்தா்யா, ஐஸ்வா்யா, ஜெயந்தி ஆகிய நால்வரும் அழகப்பா பல்கலைக்கழக
ஹேண்ட் பால் அணிக்கு தோ்வு செய்யப்பட்டு, சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென்மண்டல அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிா் ஹேண்ட் பால் போட்டியில் பங்கேற்கவுள்ளனா். இந்த மாணவிகளை கல்லூரி முதல்வா், உடல் கல்வி இயக்குநா் அசோக்குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.