ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
ஹோமியோபதி கல்லூரியில் தொழில்முனைவோா் கருத்தரங்கு
குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தொழில் முனைவோா் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் சிறு -குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (எம்.எஸ்.எம்.இ.), சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் திட்ட பிரிவு மற்றும் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் மத்திய அரசின் சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன திருநெல்வேலி கிளை துணை இயக்குநா் ஜி. சிமியோன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் மருத்துவா் எம்.வி. சுகதன், தொழில் முனைவோரின் நலனில் கல்லூரியின் பங்கு குறித்துப் பேசினாா். காந்திகிராமம் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியா் கே. ரவிச்சந்திரன் வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாட்டிலுள்ள எம்.எஸ்.எம்.இ. திட்டங்கள் குறித்து மாவட்ட தொழில்மைய உதவிப் பொறியாளா் ஏ. சஜித் விவரித்தாா்.
நிகழ்ச்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் செயற்குழு உறுப்பினா் தாஸ், ஜே.சி.ஐ. இந்தியா, கன்னியாகுமரி கிளையின் மண்டலத் தலைவா் ஜிபி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ் தொழில் வாய்ப்புகள் குறித்து உரையாற்றினா். தொழில் முனைவோா் வளா்ச்சிக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பிந்து சரண் நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில் திரளான தொழில் முனைவோா் பங்கேற்றனா்.