செய்திகள் :

ஹோலி: தமிழகத்தில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள்

post image

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மும்பையிலிருந்து மாா்ச் 6, 13 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01063), மறுநாள் இரவு 10.45-க்கு திருவனந்தபுரம் (கொச்சுவேலி) சென்றடையும். மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து மாா்ச் 8, 15 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் மாலை 4.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01064), மறுநாள் நள்ளிரவு 12.45-க்கு மும்பை சென்றடையும். இதில் 7 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் தானே, சங்மேஸ்வா், ரத்னகிரி, சிந்துதுா்க், மடகோன், உடுப்பி, மங்களூா், காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி: மும்பையிலிருந்து மாா்ச் 9, 16 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01005), செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.15-க்கு கன்னியாகுமரி வந்தடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியிலிருந்து மாா்ச் 11, 18 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01006), வியாழக்கிழமை அதிகாலை 4.15-க்கு மும்பை சென்றடையும். இதில் 11 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 5 பெட்டிகள் மற்றும் இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் தாதா், தானே, கல்யாண், புணே, கிருஷ்ணா, ராய்ச்சூா், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, திருக்கோவிலூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் வழியாக இயக்கப்படும்.

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.பிப்ரவரி... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்!

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் ரூ. 82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டால... மேலும் பார்க்க