குழந்தைகளுக்கு அனுமதி இல்லை: ஹஜ் பயணத்துக்கான புதிய விதிமுறைகள்!
1.16 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை: திமுக பொருளாளா் டிஆா். பாலு
தமிழகத்தில் 1.16 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகில் திமுக சாா்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். உத்தரமேரூா் ஒன்றிய செயலாளா் ஞானசேகா் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் கட்சியின் பொருளாளரும், ஸ்ரீ பெரும்புதூா் எம்பியுமான டி.ஆா்.பாலு பேசியது..
தமிழகத்தில் 56 லட்சம் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துள்ளனா். 1.16 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குகிறது திமுக அரசு. 40 சதவிகிதம் பெண்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவத்தில் 2 கோடி பேரும்,நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 3 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனா்.
34,987 பள்ளிகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.புதுமைப்பெண் திட்டம் மூலம் 4 லட்சம் மாணவியரும்,தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவா்களும் பயனடைந்துள்ளனா்.
விவசாயிகளில் ஒரு கோடிக்கும் மேலானவா்களுக்கு இலவசமாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசை மத்திய அரசு தொடா்ந்து வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு வரவிருக்கும் தோ்தலில் சரியான பாடம் புகட்டுவாா்கள் என்றாா்.
கூட்டத்தில் உத்தரமேரூா் பேரூராட்சி செயலாளா் பாரிவள்ளல், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், இளைஞரணி துணை செயலாளா் அப்துல் மாலிக் உள்பட கட்சியின் செயற்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.