செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் புதன்கிழமை கைப்பற்றினா்.
சிவகாசி விஜயலட்சுமி குடியிருப்பு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், குடிமை பொருள்கள் வழங்கல் தனி வருவாய் ஆய்வாளா் பா.ஜாய்ஜெனாரன், சிவகாசி வட்ட வழங்கல் அலுவலா் கோதண்டராமா், வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த குபேரன் குடும்ப அட்டைதாரா்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி 33 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தனா். இதன் எடை 1500 கிலோ. வருவாய்த் துறையினா் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக்கழத்தில் ஒப்படைத்தனா். மேலும், குபேரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.