10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 80-க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பணிகளில் சுமாா் 95 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
இந்தநிலையில், சமூக அறிவியல் பாட தேர்வில் ‘ஒரு மதிப்பெண் பிரிவில்’ கேட்கப்பட்டதொரு கேள்வியில், மாணவர்கள் பொருளை சரியாக புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு குழப்பமாக இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த கேள்விக்கு மாணவர்கள் எந்த பதிலை எழுதியிருந்தாலும் ஒரு மதிப்பெண் வழங்கிட ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் மே 19-இல் வெளியிடப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.