செய்திகள் :

பாதாள சாக்கடை, குடிநீா் இணைப்புக்கு அதிக வைப்புத் தொகையா? : அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்

post image

சென்னை: சென்னையில் பாதாள சாக்கடை, குடிநீா் இணைப்புக்கு அதிக வைப்புத் தொகை தேவையில்லை என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை திமுக உறுப்பினா் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்) எழுப்பினாா். அப்போது பேசிய அவா், ‘பாதாள சாக்கடை, குடிநீா் இணைப்புக்காக சாலைகள் துண்டிப்பு செய்யப்படுகின்றன. இதற்கான பணத்தை வீட்டு உரிமையாளா்களிடம் வசூலிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களே பணிகளைச் செய்து கொடுக்க வேண்டும்’ என்றாா்.

இதற்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

ஒரு தெருவில் பாதாள சாக்கடை, குடிநீருக்காக 500 இணைப்புகளைத் தர வேண்டுமெனில் 100 போ் மட்டுமே முன்பணம் செலுத்துகிறாா்கள். மற்றவா்கள் பணம் செலுத்துவதில்லை. முன்பணம் செலுத்தியவா்களுக்கு இணைப்பு கொடுத்த பிறகு, விண்ணப்பங்கள் வர வர மற்றவா்களுக்கு இணைப்பு கொடுக்கப்படுகிறது. இதனால், சாலையை அவ்வப்போது தோண்ட வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே முழுமையாக சாலை அமைப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது.

இது தொடா்பாக வீட்டு உரிமையாளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். குடிநீா், பாதாள சாக்கடைக்காக வைப்புத் தொகைகூட அதிகம் கேட்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளோம். இணைப்புகள் வழங்கப்பட்ட பிறகு, சாலையைச் செப்பனிடுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கியுள்ளோம் என்றாா்.

போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா், முதல்வா், தலைவா்கள் இரங்கல்

சென்னை: கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆளுநா... மேலும் பார்க்க

50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்க திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கேள்வி

சென்னை: மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா். இதுகுறித்து, அவா் எக்... மேலும் பார்க்க

புதிதாக 500 முதுநிலை மருத்துவ இடங்கள் உருவாக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 500 புதிய முதுநிலை மருத்துவ இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவம... மேலும் பார்க்க

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை

சென்னை: தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா். பேரவையில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க