பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு
இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமாா் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பரோடா வங்கியில் நிறுவனத்தின் பங்கு முதலீடு 2 சதவீதம் உயா்த்தப்படுகிறது. அதைத் தொடா்ந்து, பரோடா வங்கியில் நிறுவனத்தின் பங்குகள் 5.03 சதவீதத்தில் இருந்து 7.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2023 நவம்பா் 20 மற்றும் 2025 ஏப்ரல் 16 தேதிகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கூடுதல் பங்குகளை கையகப்படுத்தியதன் மூலம் பரோடா வங்கியில் பங்கு முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.