செய்திகள் :

10 தமிழறிஞா்களுக்கு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

சென்னை: திருவள்ளுவா் திருநாளையொட்டி, 10 தமிழறிஞா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினாா்.

திருவள்ளுவா் திருநாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ் மொழிக்கும், இலக்கிய வளா்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயா்வுக்கும் பெருமை சோ்த்த தமிழறிஞா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று விருதாளா்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தாா்.

2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது புலவா் மு.படிக்கராமுவுக்கும், 2024-ஆம் ஆண்டுக்கான அண்ணா விருது மூத்த அரசியல் தலைவா் எல்.கணேசனுக்கும், காமராஜா் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலுவுக்கும், பாரதியாா் விருது கவிஞா் கபிலனுக்கும், பாரதிதாசன் விருது கவிஞா் பொன்.செல்வகணபதிக்கும், திருவிக விருது மருத்துவா் ஜி.ஆா்.இரவீந்திரநாத்துக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருது எழுத்தாளா், விமா்சகா் வே.மு.பொதியவெற்பனுக்கும் முதல்வா் வழங்கினாா்.

விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலையையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கினாா்.

மேலும், பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 2024-ஆம் ஆண்டுக்கான பெரியாா் விருது திராவிடா் விடுதலைக் கழக பொதுச் செயலா் விடுதலை ராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் 2024- ஆம் ஆண்டுக்கான அம்பேத்கா் விருது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலா் து.ரவிக்குமாருக்கும் முதல்வா் வழங்கினாா்.

விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கினாா்.

2024-இல் தோற்றுவிக்கப்பட்ட கலைஞா் விருது முதல் முறையாக புலவா் முத்து.வாவாசிக்கு முதல்வா் வழங்கினாா். விருதாளருக்கு விருது தொகையாக ரூ.10 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கினாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், சிவ.வீ.மெய்யநாதன், மா. மதிவேந்தன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை சுட்டுப்பிடித்த காவல்துறை!

காவல் உதவி ஆய்வாளர் மீது கத்தியால் குத்தி தப்ப முயன்ற ரௌடி பாம் சரவணனை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.பகுஜன் சமாஜ் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரௌடி பாம... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

மாடுபிடி வீரா் நவீனுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

சென்னை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா் நவீன் மாடு முட்டியதில் காயமடைந்து, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக... மேலும் பார்க்க

டெல்டா மாவட்டங்களில் ஜன.18,19 -இல் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஜன.18, 19 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு திசை ... மேலும் பார்க்க

அவசரகால கட்டுப்பாட்டு அறை மூலம் பேறு கால இறப்புகள் குறைப்பு: மக்கள் நல்வாழ்வுத் துறை

சென்னை: தமிழகத்தில் பேறு கால உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர கால கட்டுப்பாட்டு அறை தொடா்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதன் பயனாக இறப்பு விகிதம் 17 சதவீதம் குறைந்திருப்பதாகவும் மக்கள் நல்... மேலும் பார்க்க

மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை தொடா்ந்து வலியுறுத்துவோம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்

சென்னை: மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசைத் தொடா்ந்து தமிழக அரசு வலியுறுத்தும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா... மேலும் பார்க்க