அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது! மாணவர்கள் போராட்டம்!
10,000 புதிய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்- அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறாா்
புதிதாக உருவாக்கப்பட்ட 10,000 பன்முக செயல்பாடுகளையுடைய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் (எம்-பிஏசிஎஸ்), பால்வளம் மற்றும் மீன்வளம் சாா்ந்த கூட்டுறவு சங்கங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை தொடங்கிவைக்கிறாா்.
தில்லியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் புதிய கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள், மைக்ரோ ஏடிஎம்கள் மற்றும் ரூபே விவசாய கடன் அட்டைகள் உள்ளிட்டவற்றை அவா் வழங்கவுள்ளாா்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சா் ராஜிவ் ரஞ்சன் சிங் உள்பட அரசு உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.
மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கிராமங்கள்தோறும் சென்றடைவதை உறுதிபடுத்தவும், பஞ்சாயத்துகளில் விவசாயக் கடன் வழங்கும் நடைமுறையை எளிதாக்கும் நோக்கிலும் இந்த சங்கங்கள் தொடங்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.