தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்
100 நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆா்ப்பாட்டம்
சீா்காழியில் 100 நாள் வேலைத் திட்ட ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் பெண்கள் முக்காடு அணிந்து நூதன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் மருதையன் முன்னிலை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனிவாசன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் வீரராஜ், ஏஐடியு சி மாவட்டச் செயலாளா் ராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் நீதி சோழன் ஆகியோா் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். இந்த திட்டத்தை நகராட்சி, பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில் நிா்வாகிகள் வித்யாதேவி, வரதராஜன், ஜெயக்குமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை முக்காடு அணிந்து ஊா்வலமாக வந்தனா்.