செய்திகள் :

11 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்தமையம் வெளியிட்ட தகவலில்,

தென்தமிழகம் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

மே 05(இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எங்கெல்லாம் இன்று கனமழை

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 06(நாளை) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

07-05-2025 முதல் 11-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை..

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை ஓட்டி இருக்கக்கூடும்.

இன்று முதல் மே 09 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள... மேலும் பார்க்க

மே 5 வணிகர் நாளாக அறிவிக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வணிகர் நாளாக விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வணிகர் சங்க கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் இன்று (மே 5) நடைபெற்றது. இதில், முதல்வர... மேலும் பார்க்க

நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்

நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தம... மேலும் பார்க்க

இதனால்தான் தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அன்பில் மகேஸ்

சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 1,008 சம்ஸ்கிருத உரையாடல் ... மேலும் பார்க்க

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை நீட்டிப்பு!

எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய உயர் நீதிமன்றம் விதித்தத் தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது. கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவு... மேலும் பார்க்க

கோவை - திருப்பூர் எல்லை வெடிமருந்து ஆலையில் பயங்கர விபத்து

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியான சுல்தான்பேட்டை அருகே மல்லேகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் வெடிமருந்து ஆலையில் இன்று (மே 5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டைச் சே... மேலும் பார்க்க