செய்திகள் :

113 ஆண்டுகளை தொட்ட டைட்டானிக்; ஆனாலும், அடங்காத ஆச்சர்யங்களைக் கூறும் ஆவணப்படம்!

post image

இருந்த போதும் சரி... இல்லாத போதும் சரி... மக்களை தொடர்ந்து ஆச்சர்யங்களில் 'மூழ்'கடித்து வருகிறது டைடானிக் கப்பல்.

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பெரும் கனவுகளோடு கிளம்பிய டைட்டானிக் கப்பல் அடுத்த ஐந்து நாள்களிலேயே பெரும் விபத்தைச் சந்தித்தது. ஏப்ரல் 15-ம் தேதி நள்ளிரவில் பனிப்பாறை ஒன்றில் மோதி 1,500 உயிர்களை காவு வாங்கியது.

இந்தக் கப்பல் மூழ்கி நேற்றோடு 113 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், இன்னமும் இந்தக் கப்பல் குறித்த ஆராய்ச்சிகள் ஓயவே இல்லை. தொடர்ந்துகொண்டே தான் உள்ளன.

வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி உள்ள டைட்டானிக் கப்பல் சமீபத்தில் டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட்டு ஆவணப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Titanic: The Digital Resurrection - ஆவணப்படம்
Titanic: The Digital Resurrection - ஆவணப்படம்

எதற்காக இந்த ஆய்வு?

நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் அட்லாண்டிக் புரொடக்ஷன்ஸ் இணைந்து "டைட்டானிக்: தி டிஜிட்டல் ரெசரெக்ஷன்" என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.

டைட்டானிக் கப்பலின் டிஜிட்டல் ஸ்கேன் அதற்காக தான் எடுக்கப்பட்டுள்ளது.

என்ன செய்தது டிஜிட்டல் ஸ்கேன்?

அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் பனிப்பாறைகள் சூழ்ந்திருக்கும் 3,800 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் கப்பலில் சிதைந்த சின்ன சின்ன பாகங்கள் உள்ளன.

இந்தப் பாகங்கள் அனைத்தும் சுமார் 7.15 லட்சம் புகைப்படங்கள் எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்களை எடுக்க நீரில் செயல்படும் ஸ்பெஷல் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சிதைந்த பெரிய பாகங்கள் அனைத்தும் அந்த கடலின் மிகவும் ஆழமான, இருண்ட கடல் பகுதியில் அமைதியாக உறங்கி கிடக்கின்றன.

இதனை அவ்வளவாக ஆராய முடியவில்லை.

இருந்தாலும், இதுவரை செய்யப்பட்ட ஆய்விலேயே, இந்த டிஜிட்டல் ஸ்கேன் ஆய்வு தான் டைட்டானிக் கப்பலில் முழுமையான காட்சிகளை முதன்முறையாக தந்துள்ளது.

டைட்டானிக் கப்பல்|ஒத்துப்போகின்றன!
டைட்டானிக் கப்பல்|ஒத்துப்போகின்றன!

முன்பகுதியும், பின்பகுதியும்

டைட்டானிக் கப்பலின் முன்பகுதி இப்போதும் 'பயணத்திற்கு ரெடி' என்பதுப்போல நேராக பெரும் சிதைவு எதுவும் இன்றி இருக்கிறது. ஆனால், பின்பகுதியோ முற்றிலும் சேதம் அடைந்திருக்கிறது.

ஒத்துப்போகின்றன!

டைட்டானிக் விபத்து சம்பவத்தில் தப்பி பிழைத்தவர்கள், "சிலரின் கப்பல் அறைக்குள் பனிக்கட்டிகள் நுழைந்தன" என்று கூறியிருந்தார்கள்.

இதற்கு ஒத்துப்போவதுப்போல, இந்த டிஜிட்டல் ஸ்கேன், ஜன்னல் போன்ற ஒரு அமைப்பை பனிப்பாறை உடைத்ததைக் காட்டுகிறது.

இது மட்டுமல்ல, இந்த டிஜிட்டல் ஸ்கேன் காட்டும் பல பல தகவல்கள் விபத்தில் இருந்து தப்பியவர்கள் கூறியதை ஒத்துப்போகின்றன.

இப்படி டைட்டானிக்: தி டிஜிட்டல் ரெசரெக்ஷன் ஆவணப்படத்தில் டைட்டானிக் கப்பலில் அடங்காத ஆச்சர்யங்கள் பல கூறப்பட்டுள்ளன.

இது 2022-ம் ஆண்டு, 6 வாரங்களாக ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் எடுத்து வந்த புகைப்படங்கள் மற்றும் செய்து வந்த ஆராய்ச்சிகள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஆகும்.

2022-ம் ஆண்டு திரட்டி வரப்பட்ட தகவல்களை வைத்து, பெரும் பணிகளுக்கு பிறகு, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இந்த ஆவணப்படம் வெளியாகி உள்ளது.

குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மைத்துனி தொடர்ந்த வழக்கு; ரத்து செய்யக் கோரி நடிகை ஹன்சிகா மனு!

பாலிவுட் நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி என்பவரை முஸ்கான் நான்சி என்பவர் திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இருவருக்கும்... மேலும் பார்க்க

"நான் ஜிம் ஆரம்பிக்க காரணம் இதுதான்" - நடிகர் மணிகண்டன் பேட்டி

'மெட்ராஸ் ஃபிட்னெஸ்' ஜிம்மை தொடங்கி, தனக்கு ஃபிட்டான மற்றொரு புது ரூட்டை எடுத்துள்ளார், நடிகரும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனுமான மணிகண்டன். நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்த 'மெட்ராஸ் ஃபிட்னெஸ்' சென்டர் ... மேலும் பார்க்க

எம்புரான் : `கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான கருத்து’ - 17 மாற்றங்கள் செய்தும் ஓயாத சர்ச்சை

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்த எம்புரான் சினிமா கடந்த மாதம் 27-ம் தேதி மலையாளம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது. சினிமா ரிலீஸ் ஆன மறுநாளில் இருந்தே குஜராத்தில் நடந்த கலவரம் ... மேலும் பார்க்க

எம்புரான் : `பாசிசத்தின் புதிய வெளிப்பாடு' - சங்பரிவாருக்கு எதிராக கொதித்த பினராயி விஜயன்

மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் சினிமா கடந்த 27-ம் தேதி ரிலீஸ் ஆனது. லூசிஃபர் சினிமாவின் இரண்டாம் பாகமான எம்புரான் ஹாலிவுட் சினிமாவுக்கு இணையாக உள்ளதாக மலையாள திரை உலகில் கொண்டாடப்படுகிறது. ... மேலும் பார்க்க

Empuraan: ``சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்'' - வருத்தம் தெரிவித்த மேகான்லால்

எம்புரான் சினிமாவில் குஜராத் கலவரம் குறித்து சில கருத்துக்கள் உள்ளதாக சங்பரிவார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. `எம்புரான் சினிமாவை பார்க்கப்போவதில்லை' என கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரச... மேலும் பார்க்க