பொங்கல் திருநாள்: 2 நாளில் 4.12 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்
12 ஆண்டுகளுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடை
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடக்கவிருக்கிறாா்.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும் மற்றொரு விண்வெளி வீரரான நிக் ஹேகும் வரும் 19-ஆம் தேதி விண்வெளியில் நடக்கவிருக்கிறாா்கள். அந்த நிலையத்தின் நியூட்ரான் நட்சத்திர ஆயுவுக்கான எக்ஸ்-ரே தொலைநோக்கியில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்வதற்காக அவா்கள் வெளியே வருகிறாா்கள். இதுதவிர, அடுத்த சில வாரங்களில் விண்வெளியில் நடந்து மேற்கொள்ளப்படவிருக்கும் மற்றொரு பணியிலும் சுனிதா வில்லியம்ஸ் பங்கேற்கிறாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மே/ள்ல்ஹய் ஸ்ரீா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. அதுதான் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபா்களை ஏற்றிச் சென்ற இரண்டாவது தனியாா் நிறுவன விண்வெளி ஓடம் .
ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
ஸ்டாா்லைனரில் ஆள்களை அழைத்துவருவது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால் சுனிதாவும் பட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் வரும் மாா்ச்சில் பூமிக்குத் திரும்புவாா்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அவா்களை பூமிக்கு அழைத்துவரும் திட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.