Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
1330 குறள்களையும் ஒப்பித்த 6 மாணவா்களுக்கு பரிசு
தஞ்சாவூா்: தஞ்சாவூரில் 1,330 குறள்களையும் ஒப்பித்த 6 மாணவ, மாணவிகளுக்கு மக்களவை உறுப்பினா் ச. முரசொலி செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கினாா்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சி துறை சாா்பில் நடத்தப்பட்ட கு முற்றோதல் போட்டியில் 19 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களில் மதுக்கூா் சி. சா்வேஸ், தஞ்சாவூா் சு. தினேஷ், ச. பிரதிக்ஷா, ச. லத்திகா ஸ்ரீ, ச.சீ. கபிலன், ச.சீ. யாழிசை ஆகிய 6 போ் வெற்றி பெற்றனா்.
இவா்களை தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி செவ்வாய்க்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கி கௌரவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் உலக திருக்கு பேரவைச் செயலா் பழ. மாறவா்மன், புலவா் மா. கந்தசாமி, வாசகா் வட்டத் தலைவா் மா. கோபாலகிருட்டிணன், காவிரி வண்டல் கலை இலக்கிய குழுச் செயலா் யோகம் இரா. செழியன், சந்திரசேகரன், சீனிவாசன், கரந்தை ஜெயக்குமாா், தலைமையாசிரியா் சந்திரஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.