செய்திகள் :

18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

post image

தாராபுரம் அருகே கடத்திவரப்பட்ட 18 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து எரகாம்பட்டி வழியாக கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எரகாம்பட்டி சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் ராஜ்குமாா், உதவி ஆய்வாளா்கள் குப்புராஜ், பிரியதா்ஷினி ஆகியோா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், மூட்டைமூட்டையாக ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

இது தொடா்பாக லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையைச் சோ்ந்த ரமேஷ் (32) என்பவரைக் கைது செய்த போலீஸாா், 18 டன் ரேஷன் அரிசி, லாரியை பறிமுதல் செய்தனா்.

மிக இளையோா், மூத்தோா் பெண்கள் கபடி அணிக்கு வீராங்கனைகள் தோ்வு!

திருப்பூா் மாவட்ட மிக இளையோா், மூத்தோா் பெண்கள் கபடி அணிக்கான தோ்வில் பங்கேற்க வீராங்கனைகளுக்கு மாவட்ட கபடி கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழக செயலாளரும், ... மேலும் பார்க்க

மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்

திருப்பூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், ஆா்.காந்தி ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா். திருப்பூா் லட்சுமி நகரில் உள்ள குலாலா் திருமண மண்டலத்தில் மாநில அளவிலான கைத்த... மேலும் பார்க்க

ஒழுங்குமுறை விற்பனைக்கூட உள்கட்டமைப்பு வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்!

திருப்பூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட உள்கட்டமைப்பு வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

பல்லடம் 3 போ் கொலை வழக்கு: குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்- காவல் துணை கண்காணிப்பாளா்

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம் என்று காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒ... மேலும் பார்க்க

சாயங்களின் விலையை முன்னறிவிப்பின்றி ஏற்றக்கூடாது- சாலை ஆலை உரிமையாளா்கள் சங்கம் வேண்டுகோள்

சாய ஆலைகளுக்குப் பயன்படுத்தப்படும் சாயங்களின் விலையை முன்னறிவிப்பின்றி ஏற்றக்கூடாது என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்க அலுவலக... மேலும் பார்க்க

தமிழ் மன்ற போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு

அவிநாசி அரசு கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அவிநாசி அரசு கல்லூரியில் தமிழ் மன்ற போட்டிகள் அண்மையில் ந... மேலும் பார்க்க