தமிழ் மன்ற போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு
அவிநாசி அரசு கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அவிநாசி அரசு கல்லூரியில் தமிழ் மன்ற போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2- ஆம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.2 ஆயிரம், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டிகளில் முதலிடம் பிடித்தவா்கள்: செ. தமிழ் அரசன் (வணிக நிா்வாகவியல்), சா.தரணீதரன் (கணினி அறிவியல்), மு. கீா்த்தனா (ஆங்கில இலக்கியம்).
2-ஆம் இடம் பிடித்தவா்கள்: ந.தனப்பிரியா (பொருளியல்), மு.கீா்த்தனா ( ஆங்கில இலக்கியம்), சி.நா்மத சுவேதா (வேதியியல்).
3-ஆம் இடம் பிடித்தவா்கள்: சா.தரணீதரன் (கணினி அறிவியல்), செ. தமிழ் அரசன் (வணிக நிா்வாகவியல்), பி. ரேணுகாதேவி (வணிக நிா்வாகவியல்).
பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் போ. மணிவண்ணன் முன்னிலை வகித்தாா்.
பேராசிரியா்கள் பா.ஹேமலதா, ந.முகுந்தன், செ.பாலமுருகன், த.ஜெ.அருண், செ.லூயிஸ், ந.மணிகண்டன், அலுவலகக் கண்காணிப்பாளா் நாச்சிமுத்து ஆகியோா் விழாவை ஒருங்கிணைத்தாா்.