அமெரிக்காவில் பிறந்த குழந்தை! பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி!
2கே லவ் ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’2கே லவ் ஸ்டோரி'.
புதுமுக நாயகனாக ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: அமைச்சர் அன்பில் மகேஸ் நடித்த தொடர் எது தெரியுமா?
இப்படத்துக்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப். 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், 2கே லவ் ஸ்டோரி திரைப்படம் வரும் மார்ச் 14 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.