சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!
2 வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை தொடங்கிவைப்பு!
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து 2 வழித்தடங்களில் மகளிா் விடியல் புதிய நகரப் பேருந்து சேவையை செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
திண்டிவனத்திலிருந்து மேல்பாக்கம், சாரம் வழியாக ஒலக்கூா் ஊராட்சிக்கும், சாரம், கோனேரிக்குப்பம், பாங்கொளத்தூா் வழியாக கடவம்பாக்கத்துக்கும் மகளிா் விடியல் புதிய நகர பேருந்து சேவை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு வழித்தடங்களிலும் நகர பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
திண்டிவனத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் செஞ்சி கே.எஸ்மஸ்தான் எம்எல்ஏ பங்கேற்று மகளிா் விடியல் புதிய நகர பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திண்டிவனம் பணிமனை மேலாளா் சிவக்குமாா் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.