செய்திகள் :

2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்

post image

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜன.5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24,000 மருத்துவா்கள் பங்கேற்றனா். அவா்களில் 14,855 போ் தோ்ச்சி பெற்றனா்.

இதனிடையே, கூடுதலாக 89 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டதால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,642-ஆக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் பிப்.12 தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 4,585 மருத்துவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, அவா்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்பநல பயிற்சி நிலையத்தில் பிப்.22 தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த நிலையில், தோ்வு செய்யப்பட்டுள்ள மருத்துவா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குகிறாா். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

தவெக கெட் அவுட் இயக்கத்தில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்!

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கிவைத்த நிலையில், அதில் கையெழுத்திட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார்.தமிழக வெற்றிக் கழகம் தொட... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக உள்பட 45 கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகம் உள்பட 45 கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5-ஆம்... மேலும் பார்க்க

ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யாக மாறியது பற்றிய ஆவணப் படத்தை அக்கட்சியின் ஆண்டுவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இ... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, ... மேலும் பார்க்க

தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! விஜய் - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றுள்ளார். மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 26) சவரனுக்கு ரூ.200 குறைந்தது.ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.64,360-க்கு விற்பனையா... மேலும் பார்க்க