செய்திகள் :

டீசர் புரோமாவால் அஜித் ரசிகர்கள் உற்சாகம்!

post image

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி டீசர் புரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: மாஸ்க் போஸ்டர்கள் வெளியீடு!

தமிழ் புத்தாண்டு வெளியாக ஏப். 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதனால், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகவுள்ளன. சில நாள்களுக்கு முன் நடிகை த்ரிஷா ‘ரம்யா’ என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக விடியோ வெளியிட்டு அறிவித்தனர்.

இந்த நிலையில், நேற்று (பிப். 25) குட் பேட் அக்லி படத்தின் டீசர் வருகிற பிப். 28 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ வெளியிட்டு அறிவித்தன.

அந்த புரோமோவில் அஜித் இரு வெவ்வேறு தோற்றங்களில் வருவதும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

காசியில்... சிவராத்திரி வழிபாட்டில் சின்ன திரை நாயகி!

சின்ன திரை நாயகி மதுமிதா சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். காசிக்குச் சென்றுள்ள அவர், சிவன் கோயில்களில் தரிசனம் செய்த விடியோக்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்... மேலும் பார்க்க

மெஸ்ஸி உள்பட 2 இன்டர் மியாமி வீரர்களுக்கு அபராதம்..!

எம்எல்எஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு மெஸ்ஸி உள்பட 2 இன்டர் மியாமி வீரர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அமெரிக்காவின் சேஸ் திடலில் 2ஆவது லெக் சுற்றில் கான்ஸ்டாஸ் சிட்டியை 3-1 வீ... மேலும் பார்க்க

பவித்ரா தொடரில் நடிக்கும் நெஞ்சத்தைக் கிள்ளாதே நாயகி!

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள பவித்ரா தொடரில், நடிகை தியா முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஜீ தமிழின் முதன்மை தொடர்களான நீதானே என் பொன்வசந்தம், புதுப் புது அர்த்தங்கள், சீதாராமன் ஆகிய த... மேலும் பார்க்க

‘படமல்ல... கவிதை’ விண்ணைத் தாண்டி வருவாயா வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு !

விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, த்ரிஷா நடித்த திரைப்படமான விண்ணைத் தாண்டி வருவாயா கடந்த 2010, பிப்.26 ஆம்... மேலும் பார்க்க

மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டம்: சாம்பியன்ஸ் கோப்பையில் இன்டர் மியாமி முன்னேற்றம்!

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இன்டர் மியாமி 3-1 என கான்சாஸ் சிட்டியை வீழ்த்தியது. கான்காகேஃப் சாம்பியன்ஸ் கப் முதல் சுற்றில் இன்டர் மியாமி அணியும் கான்ஸ்டாஸ் சிட்டி அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து ... மேலும் பார்க்க

இந்தியன் - 3 அப்டேட்!

நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் - 3 குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியான... மேலும் பார்க்க