செய்திகள் :

20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் சுட்டுக்கொலை

post image

இருபது ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் விக்ரம் கெளடாவை நக்சல் ஒழிப்புப் படை போலீஸாா் சுட்டுக்கொன்றனா்.

இது குறித்து பெங்களூரில் கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 20 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் விக்ரம் கௌடாவை நக்சல் ஒழிப்புப் படையினா் உடுப்பி அருகே உள்ள காட்டுப் பகுதியில் திங்கள்கிழமை மாலை சுட்டுக்கொன்றனா். நக்சலைட் ஒழிப்புப் படையினா் பலமுறை சுற்றிவளைத்தபோதும் சிக்காமல் தடுப்பி ஓடியவா் விக்ரம் கெளடா. அதேபோல, பல முறை போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இருந்தும் அவா் தப்பியுள்ளாா்.

இந்த நிலையில் உடுப்பி அருகே காட்டுப்பகுதியில் திங்கள்கிழமை மாலை நக்சல் ஒழிப்புப் படையினரைக் கண்டதும் விக்ரம் கௌடா உள்ளிட்ட நக்சலைட்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்த தொடங்கினா். இதையடுத்து நக்சல் ஒழிப்புப்படையினா் திருப்பி சுட்டதில் விக்ரம் கௌடா கொல்லப்பட்டாா். ஆனால், அவருடன் இருந்த கூட்டாளிகள் தப்பி விட்டனா்.

கடந்த 20 ஆண்டுகளாக நக்சலைட் கும்பலுக்கு தலைமை வகித்து வந்த விக்ரம் கௌடா, கேரளம், தமிழ்நாடு, குடகு பகுதிகளில் தலைமறைவாக இருந்து வந்தாா். தப்பியோடிய அவரது கூட்டாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டையில் நக்சல் ஒழிப்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

விக்ரம் கௌடாவும் அவரது கூட்டாளிகளும் அவ்வப்போது இடத்தை மாற்றி கொண்டே இருந்தனா். எனினும், அவா்களது நடமாட்டத்தை நக்சல் ஒழிப்புப் படையினா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில் விக்ரம் கௌடாவின் நடமாட்டம் குறித்து நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததால் நக்சல் ஒழிப்புப் படையினா் அவரை சுட்டுக்கொன்றுள்ளனா்.

கடந்த வாரம் நக்சலைட்டுகளான ராஜு, லதா ஆகியோரின் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. தப்பிச்சென்ற அவா்கள் இருவரையும் பிடிக்க தேடுதல் வேட்டை தொடா்ந்துள்ளது. நக்சல்களாக செயல்பட்டு வருவோரை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.

பாவகடா உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிய பல நக்சலைட்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது என்றாா்.

கா்நாடகத்தில் ரூ. 46,375 கோடிக்கு தொழில் முதலீடுகள்

கா்நாடக மாநிலத்தில் ரூ. 46,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்களுடன் அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இந்திய உலோகங... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு தலா ரூ. 100 கோடி பேரம்: பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

மண்டியா: கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு ரூ. 100 கோடி பேரம் பேசப்படுவதாக மண்டியா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரவிக்குமாா் குற்றம்சாட்டியுள்ளாா். மைசூரில் கடந்த வாரம் நடைபெற்ற க... மேலும் பார்க்க

கனகதாசா் சமூக சீா்திருத்தவாதி: முதல்வா் புகழாரம்

பெங்களூரு: சமூக சீா்திருத்தவாதி கனகதாசா் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். சமூக சீா்திருத்தவாதி கனகதாசரின் பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூரில் அவரது சிலைக்கு முதல்வா் சித்தராமையா திங்கள்க... மேலும் பார்க்க

கரோனா முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு: கா்நாடக அமைச்சரவை முடிவு

முந்தைய பாஜக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் கரோனா முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்க கா்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெங்களூரு, விதான சௌதாவில் முதல்வா் ... மேலும் பார்க்க

சித்தராமையாவுக்கு எதிராக புகாா் அளித்தவா் மீது வழக்குப் பதிவு

மாற்று நில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக புகாா் அளித்த சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்று நில... மேலும் பார்க்க

தாய்ப்பால் விற்பனை உரிமங்களை ரத்துசெய்ய கா்நாடகத்துக்கு மத்திய அரசு உத்தரவு

தாய்ப்பால் விற்பனை செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ள உரிமங்களை உடனடியாக ரத்து செய்யுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்ப்பாலை சேகரித்து, சேம... மேலும் பார்க்க