2025-26 மத்திய பட்ஜெட்: வளர்ச்சி, பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும்
புது தில்லி: வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிர்மலா சீதாராமன், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்கும் பணிகளைச் செய்து வருகிறோம். அனைவருக்குமான வளர்ச்சி என்ற நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
வரிவிதிப்பு மற்றும் நிதித் துறை உட்பட ஆறு களங்களில் "மாற்றத்தக்க சீர்திருத்தங்களை" தொடங்குவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளின் அரசாங்கத்தின் வளர்ச்சி சாதனை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், உள்ளடக்கிய வளர்ச்சியை பாதுகாத்தல், சமூகம் மற்றும் தொழில்துறையை ஊக்குவித்தல் மற்றும் நாட்டின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்திக்கான செலவினத்தை அதிகரித்தல் என்று அவர் கூறினார்.
வறுமையை ஒழித்தல், குழந்தைகளுக்கு 100 சதவிகிதம் தரமான கல்வியை உறுதி செய்தல், குறைந்த மற்றும் விரிவான சுகாதார சேவையை வழங்குதல், வேலைவாய்ப்புடன் திறமையான பணியாளர்களை உருவாக்குதல், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை 70 சதவிகிதமாக அதிகரித்தல், இந்தியாவின் விவசாயத் துறையை "உலகின் உணவு மையமாக" உருவாக்க மேம்படுத்துதல், பொருளாதார அதிகாரமளித்தல், தொழில்துறை முன்னேற்றம் மற்றும் சமூக நலவாழ்வில் கவனம் செலுத்தி, நாட்டின் வளளர்ச்சிக்கு பட்ஜெட் தெளிவான பாதையை அமைக்கிறது. வலுவான சாதனைப் பதிவு மற்றும் லட்சிய இலக்குகளுடன், வரும் ஆண்டுகளில் நாட்டை அதிக செழிப்பை நோக்கி நகர்த்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என தெரிவித்தார்.