செய்திகள் :

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்: முதல்வர் ஸ்டாலின்

post image

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் உடுமலையில் ரூ.1,427 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் அவர் பேசுகையில், இயற்கை எழில் கொஞ்சும் உடுமலைப்பேட்டையில் சிறப்பான நிகழ்ச்சி நடைபெறுகிறது. சர்க்கரையை அள்ளித் தரும் இனிப்பான ஊர் உடுமலைப்பேட்டை. திருப்பூரில் மட்டும் 133 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திருப்பூர் மாவட்டத்திற்கு செய்திருக்கிறோம். அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.

திருப்பூரில் 5 பாலங்களை கட்ட கலைஞர் உத்தரவு பிறப்பித்தபோது அதிமுக ஆட்சியில் அதை முடக்கினர். தொடர்ந்து அடி மேல் அடி விழுவதால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பழனிசாமி. விரக்தியில் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா என நினைத்துக்கொண்டு சவுண்டு விடுகிறார் பழனிசாமி. சுந்தரா டிராவல்ஸ் பேருந்தை எடுத்துக் கொண்டு ஊர், ஊராக சென்று எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்புகிறார்.

உடுமலைப்பேட்டை: 1 கி.மீ. நடந்து வந்து மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

இந்த நல்லாட்சி என்றும் தொடரும். உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார் எனத் தெரியவில்லை. 2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும். அரசின் திட்டங்களை முடக்க உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுகவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிவி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு என்ற கனவுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மாணவர்கள், இளைஞர்களுக்காக ரூ.9 கோடியில் நவீன நூலகம் அமைக்கப்படும். திருப்பூரில் ரூ.5 கோடியில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். ஊத்துக்குளியில் வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.6.5 கோடியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், முத்துசாமி, கயல்விழி செல்வராஜ், சக்ரபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர் மனீஷ் நாரணவரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Chief Minister Stalin has said that the AIADMK's defeat in the 2026 elections will start from the western region.

திருப்பூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 7 புதிய அறிவிப்புகள்!

திருப்பூர் மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 11) திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பண... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 5, நாளை 3 மாவட்டங்களிலும் கனமழை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களிலும், நாளை 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,11-08-2025: தமிழகத்தில் ஒ... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்... மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபுவுக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு! உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு தாக்கப்பட்ட வழக்கில் காவல்துறை டிஎஸ்பி, ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை... மேலும் பார்க்க

சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன மின்சார பேருந்து சேவை தொடக்கம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன மின்சார பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.சென்னை பெரும்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட மின்சார பேருந்து பணிமனையை இன்று காலை துணை முதல்வர் ... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் எம்.எட். சேர்க்கை: ஆக. 20 வரை விண்ணப்பிக்கலாம்!

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (ஆக. 11) முதல் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.2025-... மேலும் பார்க்க