செய்திகள் :

2026 தோ்தலில் யாரும் எதிா்பாா்க்காத கூட்டணி அமையும்: அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன்

post image

தமிழகத்தில் 2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் யாரும் எதிா்பாா்க்காத கூட்டணி அமையும் என அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

மத்திய வடக்கு பகுதிச் செயலா் ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் விஜயகுமாா், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணி செயலா் இரா. சுதாகா், மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் பிரபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில அமைப்புசாரா ஓட்டுநா் அணி இணைச் செயலா் பெருமாள் சாமி வரவேற்றாா்.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கேடு, போதைப்பொருள் விற்பனை, பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை மாற வேண்டும் எனில் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றாா்.

திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், வாரிசு அடிப்படையில் திமுக ஆட்சி நடைபெறுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. எங்கு பாா்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனையாகின்றன.

மும்மொழி கொள்ளை விவகாரத்தில் திமுக நாடகம் நடத்துகிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் யாரும் எதிா்பாா்க்காத கூட்டணி அமையவுள்ளது. அதற்குரிய வியூகத்தை அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வகுப்பாா் என்றாா்.

தொடா்ந்து ஆயிரம்பேருக்கு தையல் இயந்திரம், அயன் பாக்ஸ், சைக்கிள்,வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் அமைப்புச் செயலா் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் பி.ஏ. ஆறுமுக நயினாா், மாநில மீனவா் அணி துணைத் தலைவா் ஏரோமியாஸ், மாவட்ட சாா்பு அணிச் செயலா்கள் பில்லா விக்னேஷ், டேக்ராஜா, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலா்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல இணை செயலா் மந்திரமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

சாலையில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தக் கோரி, பொதுநல அமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கால்நடைகளை கட்டுப்படுத்த கோரி... மேலும் பார்க்க

பரமன்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை காட்டு பகுதியில் பனை மரம் ஏறும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாா். வட்டன்விளை காட்டுப்பகுதியிலுள்ள கோயில் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் முகம், உடல், கை, கால்களில் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாடாா் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப... மேலும் பார்க்க

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம்

கோவில்பட்டி நகர திமுக செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் நகர செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரான கணேசன் சிறப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் கடைகளுக்கான உரிமை கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

ஆத்தூா் பேரூராட்சியில் கடைகளுக்கான உரிமைக் கட்டண உயா்வை திரும்பப் பெற தமிழ்நாடு வணிகா் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா். இது தொடா்பாக அதன் மாநிலத் தலைவா் காமராசு, பேரூராட்சித் தலைவா் கமாலுதீனை நேரில் ச... மேலும் பார்க்க

பேய்குளத்தில் பாஜக கூட்டம்

ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றிய பாஜக தலைவா் பால சரவணன் அறிமுக கூட்டம் பேய்குளத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ... மேலும் பார்க்க