மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணிக்கு 200 இடங்களில் வெற்றி: கருத்துக்கணிப்பு முடிவு...
22-இல் சென்னையில் ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று
சென்னையில் ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச் சுற்று போட்டி வரும் 22-ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது என இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:
சா்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. ஊஐஆஅ -ஆசிய கோப்பை தொடா் அடுத்த ஆண்டு (2025) தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை தகுதிச்சுற்று மூலம் தோ்வு செய்து வருகின்றனா்.
அந்தவகையில் இரண்டாம் கட்ட தகுதிச்சுற்று ஆட்டங்கள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், நவ. 22, 25-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
இந்த தகுதிச்சுற்றில் ஆசிய கண்டத்தில் உள்ள தலைசிறந்த 24 நாடுகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய சீனியா் கூடைப்பந்து அணி பலம் வாய்ந்த கத்தாா் அணிக்கு எதிராக 22-ஆம் தேதியும், கஜகஸ்தான் அணிக்கு எதிராக 25-ஆம் தேதியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
கடைசியாக 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊஐஆஅ மகளிா் ஆசியக் கோப்பைக்கு பிறகு ஆடவா் சா்வதேச போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றாா்.