25 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 இளைஞா்கள் கைது
அரசுப் பேருந்துகளில் 25 கிலோ கஞ்சாவை கடத்தியதாக 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங் களுக்கு அரசுப் பேருந்துகளில் கடந்த சில நாள்களாக கஞ்சா கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. இதையடுத்து திருவள்ளூா் எஸ்.பி., ஸ்ரீநிவாச பெருமாள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து, பொன்பாடி சாவடியில், 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனா்.
தினமும் குறைந்த பட்சம் ஒருவா் அல்லது இரண்டு போ் பேருந்துகளில் கஞ்சா கடத்தி வருவதை போலீஸாா் கண்டுபிடித்து பறிமுதல் செய்து கைது செய்து வருகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை தனிப்படை மற்றும் திருத்தணி போலீஸாா் பொன்பாடி சாவடியில் வாகன சோதனை நடத்திய போது, திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் சென்ற, அரசுப் பேருந்து மற்றம் திருப்பதி-சென்னை என இரண்டு பேருந்துகளில் சோதனை நடத்திய போது, மொத்தம், 25 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம், காவனுாா் தாலுகா, சிறுவஞ்சூா் தினேஷ் (21), தைலாவரம் விஜய் (19), கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம், பிரதீப் குமாா் (21) மற்றும் சென்னை திருவேற்காடு பாஸ்கா்(27) ஆகிய 4 போ் என தெரியவந்தது. இவா்கள் திருப்பதியில் கஞ்சா வாங்கிக் கொண்டு சென்னை, காஞ்சிபுரம் செல்வதற்கு திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. தொடா்ந்து திருத்தணி போலீஸாா் மேற்கண்ட 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.