செய்திகள் :

25 மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

post image

தமிழகத்தில் 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மையங்கள் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆய்வுத் தரவுகளின்படி இந்தியாவில் 14.6 சதவீதம் போ் மதுப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனா். அதேபோன்று கஞ்சாவுக்கு 2.8 சதவீதம் பேரும், ஹெராயின், ஒபியம் உள்ளிட்ட போதை பொருள்களுக்கு 4.5 சதவீதம் பேரும் அடிமையாகியிருப்பதாகத் தெரிகிறது.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 10-இல் 4 பேருக்கு மதுப் பழக்கம் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த எண்ணிக்கை அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, சமூகத்தில் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு செயல் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது.

மாநில அரசுடன் இணைந்து தேசிய சுகாதார இயக்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை, மதுரை, திருச்சி உள்பட 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் தலா 20 படுக்கைகள் அதற்காக அமைக்கப்படுகின்றன.

இந்த மையங்களில் பணியமா்த்தப்படுவா்களுக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஒவ்வொரு மையத்திலும், மனநல ஆலோசகா், உளவியலாளா், மனநல சமூக சேவகா், செவிலியா், மருத்துவமனை பணியாளா், சுகாதாரப் பணியாளா் மற்றும் காவலா் ஆகியோா் நியமிக்கப்படுவா். இந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகு போதை பழக்கத்துக்கு உள்ளானவா்களுக்கு மட்டுமன்றி அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கும் உளவியல் ஆலோசனைகள் அளிக்கப்படும். இந்த மையங்கள் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பொங்கல் பண்டிகைக்கு ஜன.17-ம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு ஜன.17-ம் தேதியும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை ... மேலும் பார்க்க

பல்கலை. மாணவி விவகாரம்: ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆதாரங்கள் பறிமுதல்

சென்னை: அண்ணா. பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டிலிருந்து முக்கிய ஆதாரங்களும் லேப்டாப் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை கிண்டியில் அமை... மேலும் பார்க்க

ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு சோதனை

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் பார்க்க

மீண்டும் கனமழை: எப்போது, எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஜன.10ல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,ஜனவரி 04, 05 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகத்... மேலும் பார்க்க

மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன்.. சாரிடம் கூறிய ஞானசேகரன் - அண்ணா பல்கலை. மாணவி திட்டவட்டம்

சென்னை: மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என்று செல்போனில் அழைத்த சாரிடம் ஞானசேகரன் கூறினார் என்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா பல்கலை. மாணவி சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்தியிருப்பதாகத் த... மேலும் பார்க்க

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை: கனிமொழி பேட்டி

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை. குற்றவாளி... மேலும் பார்க்க