"ஆளாக்கிவிட்ட தந்தையை கொச்சைப்படுத்துபவரைப் பொருட்படுத்த வேண்டாம்" - அன்புமணி மீ...
26 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஒளிபரப்பாகிறது சித்தி தொடர்!
ராதிகா சரத்குமார் - சிவகுமார் நடிப்பில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சித்தி தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு சித்தி தொடரின் முதல் பாகம் ஒளிபரப்பாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பழைய ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் விதமாகவும், புதிய ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டும் விதமாகவும் சித்தி தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் 1999 டிசம்பர் முதல் சித்தி தொடர் ஒளிபரப்பானது. ராதிகா நாயகியாகவும், சிவகுமார் நாயகனாகவும் நடித்த இந்தத் தொடர், கிட்டத்தட்ட இரு ஆண்டுகளுக்கு 2001 நவம்பர் வரை ஒளிபரப்பானது.
’இதி கத காது’ என்ற தெலுங்கு தொடரில் நடித்திருந்தாலும், தமிழுக்கு சித்தி தொடரின் மூலமே சின்ன திரைக்கு ராதிகா அறிமுகமானார். இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, செல்லமே, அரசி, வாணி ராணி, தாமரை ஆகிய தொடர்களில் நடித்தார்.
சித்தி தொடரின் வரவேற்பைத் தொடர்ந்து சித்தி இரண்டாம் பாகத்திலும் ராதிகா நடித்திருந்தார். இந்தத் தொடர் 2020 முதல் 2022 வரை ஒளிபரப்பானது. ராடன் மீடியா தயாரிப்பில், சன் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பானது.
இந்நிலையில், தந்தி ஒன் தொலைக்காட்சியில் சித்தி தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஒளிபரப்பாகவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க |ஜீ தமிழ் தொடர்களில் சிறந்த நடிகை யார்?