செய்திகள் :

27% பிரீமியத்தில் பட்டியலான லக்ஷ்மி டென்டல்!

post image

புதுதில்லி: லக்ஷ்மி டென்டல் லிமிடெட் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ.428க்கு நிகராக சுமார் 27% பிரீமியத்துடன் இன்று பங்குச் சந்தையில் பட்டியலானது.

இந்த பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையின் வெளியீட்டு விலையிலிருந்து 23.36 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.528 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது மேலும் 36.37% அதிகரித்து, ரூ.583.70 ஆக உள்ளது.

தேசிய பங்குச் சந்தையில் 26.63 சதவிகிதம் உயர்ந்து ரூ.542 ஆக பட்டியலிடப்பட்டது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3,129 கோடியாக உள்ளது.

லக்ஷ்மி டென்டல் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ ஆனது ஏலத்தின் இறுதி நாளில் 113.97 மடங்கு சந்தாவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு! ரூ.86.55

பட்ஜெட் தாக்கல்: ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை!

பங்குச்சந்தைகள் இன்று(பிப். 1) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை வணிகம் இன்று நடைபெற்றது.மும்பை பங்குச... மேலும் பார்க்க

பட்ஜெட் எதிரொலி: ரூ. 62,000-யைக் கடந்த தங்கம் விலை!

மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஜன. 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.6... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை இன்று செயல்படுகின்றன. அதன்படி, பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை... மேலும் பார்க்க

பட்ஜெட்: 3-வது முறையாக சனிக்கிழமை செயல்படும் பங்குச் சந்தை!

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யவிருப்பதால் மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் வழக்கம் போல் செயல்படவுள்ளன.இது குறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் ... மேலும் பார்க்க

சிட்டி யூனியன் வங்கி வருவாய் ரூ.1,707 கோடி

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.1,707 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து வங்கிய... மேலும் பார்க்க

பரோடா வங்கி நிகர லாபம் 6% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கியின் நிகர லாபம் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபா் ம... மேலும் பார்க்க