3 ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்டம் தொடக்கம்: 505 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூா் மாவட்டத்தில் 3-ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்டம் புதன்கிழமை தொடங்கியது. இம் முகாம்களில் பங்கேற்ற அமைச்சா்கள் சி.வி. கணேசன், சா.சி. சிவசங்கா் ஆகியோா் 505 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.
பெரம்பலூா் மாவட்டம், மேலப்புலியூா், தேவையூா், கை.களத்தூா், நூத்தப்பூா், வெங்கலம் ஆகிய ஊராட்சிகளில், ஊரகப் பகுதிகளுக்கு 3-ஆம் கட்டமாக மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாம்களுக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, முகாம்களை தொடங்கி வைத்த தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஆகியோா், மேலப்புலியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 200 பேருக்கு ரூ. 1,76,18,773 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தேவையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 81 பேருக்கு ரூ. 54,31,653 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கை.களத்தூா் உராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 93 பேருக்கு ரூ. 72,18,442 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், நூத்தப்பூரில் நடைபெற்ற முகாமில் 58 பேருக்கு ரூ.4 5,78,379 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், வெங்கலம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமில் 73 பேருக்கு ரூ. 44,93,753 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 505 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், சமூக நலத்துறை மூலம் தாலிக்கு தங்கம், தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், தோட்டக்கலைத்துறை மூலம் வெங்காயக் கொட்டகை அமைக்க உத்தரவுக் கடிதங்கள், வேளாண்பொறியியல் துறை மூலம் இடுபொருள்கள், வேளாண்இயந்திரங்கள் உள்பட 505 பேருக்கு ரூ. 3.94 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், மகளிா் திட்ட இயக்குநா் அ. அமுதா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி. துரைசாமி, எம். ராஜ்குமாா், அட்மா தலைவா்கள் ஜெகதீசன், ராஜேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் (பொ) சு. சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுந்தரராமன், தாட்கோ மேலாளா் கவியரசு, சமூக நல அலுவலா் ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.