3-ஆவது இடத்தில் ரியல் காஷ்மீா்
ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீா் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்திய கால்பந்து சம்மேளனம் சாா்பில் இரண்டாம் நிலை அணிகளுக்கு ஐ லீக் தொடா் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரியல் காஷ்மீா்-அய்ஸாா் எஃப்சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கடும் சவாலுக்குப்பின் ரியல் காஷ்மீா் 2-1 என்ற கோல் கணக்கில் அய்ஸால் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 18 ஆட்டங்களில் 32 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.

சொந்த மைதானத்தில் இது ரியல் காஷ்மீரின் 5-ஆவது வெற்றியாகும். சா்ச்சில் பிரதா்ஸ் முதலிடத்திலும், இன்டா் காஷி இரண்டாம் இடத்திலும் உள்ளனா். கரீம் ஸாம்ப் 31, பாவ்லோ ஸாா் 77 ஆவது நிமிஷங்களிலும், அய்ஸால் தரப்பில் லால்ரின்ஸுலா 58-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.