செய்திகள் :

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

post image

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் இணையவழி மோசடியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடி தற்போது பெருமளவில் அதிகரித்து வருகிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் என வங்கிக் கணக்கில் அதிக பணம் வைத்திருப்பவர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது.

உங்களுடைய மொபைல் எண்ணுக்கு விடியோ காலில் அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில், சிபிஐ / வருமானவரித் துறை/ காவல்துறை அதிகாரிகள் என்று கூறி, நீங்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவோ குற்றம் செய்திருப்பதாகவோ உங்களை நம்பும்படி செய்து பின்னர் 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்கிறோம் என்று ஆன்லைனிலே வைத்திருக்கின்றனர். பல மணி நேரம், பல நாள்கள்கூட இப்படியே இருக்க வைக்கின்றனர். இதன் மூலமாக பலரும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் 76 வயது ஓய்வுபெற்ற அரசு மருத்துவர், 3 நாள்கள் டிஜிட்டல் அரெஸ்ட்டுக்குப் பிறகு மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

மலக்பேட்டையில் உள்ள நாகார்ஜுனா மருத்துவமனையில் மூத்த தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பெண் மருத்துவரை, கடந்த செப். 5 ஆம் தேதி, சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் என்று கூறி மோசடி கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. பெங்களூரு காவல்துறை லோகோ, காவல்துறை ஆவணங்களைக் காட்டி அவரை நம்ப வைத்துள்ளனர். அவரிடம் உள்ள பணத்தைத் தரவில்லை என்றால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி டிஜிட்டல் கைது செய்வோம் என்று மிரட்டியுள்ளனர்.

அவரும் கடந்த செப். 6 ஆம் தேதி தனது வங்கிக் கணக்கில் இருந்து மோசடி கும்பல் கொடுத்த ஐசிஐசிஐ வங்கிக் கணக்கிற்கு ரூ. 6.6 லட்சம் அனுப்பியுள்ளனர். ஆனாலும் மோசடி கும்பல் தொடர்ந்து அச்சுறுத்தல் செய்யவே அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து, வேறு ஒரு மொபைல் எண்ணிலிருந்தும் அவருக்கு அழைப்பு வரவே, அவர் தீவிர நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செப். 8 அன்று இறந்தார்.

டிஜிட்டல் மோசடி கும்பல் காரணமாகவே அவர் இறந்ததாக செப். 9 ஆம் தேதி அதாவது அவரது இறுதிச் சடங்கிற்குப் பிறகே காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவர் இறந்தபிறகும் அந்த கும்பல் தொடர்ந்து மருத்துவரின் எண்ணுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளதாகவும் போலீசார் கூறினர். இணையவழி மோசடியால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாக புகார் தெரிவிக்கவும்.

76 year old Hyderabad resident dies after 3 days of digital arrest

இதையும் படிக்க | நேனோ பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், வெள்ளத்தில் தனது சைக்கிள் சேதமானதற்கு அழுத 6 வயது சிறுவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய சைக்கிளை பரிசளித்துள்ளார். பஞ்சாபில் வெள்ளத... மேலும் பார்க்க

மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புகள் பற்றிய கதையை பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து பகிர்ந்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, சர்வதேச தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் மக்களிடம் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்: நிர்மலா சீதாராமன்

புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%... மேலும் பார்க்க

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

கர்நாடகத்தில் யூ டியூப் சேனல்கள் தொடங்கவும் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது. கர்நாடகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில், 2 பெண் நக்சல்கள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். எட்டப்பள்ளி தாலுக்காவில் உள்ள மொடாஸ்கே கிராமத்தின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதா... மேலும் பார்க்க

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

சுதந்திர இந்தியா 100 வயதை அடையும் போதும், இந்தியாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பணியாற்ற வேண்டும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை... மேலும் பார்க்க