350 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது!
கோவை, காருண்யாநகா் பகுதியில் 350 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா்.
கோவை, காருண்யா நகா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கிருந்த ஒரு வீட்டில் 350 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஐயப்பன் (29), திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜா (32), தொண்டாமுத்தூரைச் சோ்ந்த ரமேஷ் (44) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த புகையிலைப் பொருள்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.