Nippo Swooper: கொசுக்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுக்க நிப்போ நிறுவனம் அறிமுகம்
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை(நவ. 26) 3 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை(நவ. 26) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விழுப்புரம்
கடலூர்
அரியலூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
சிவகங்கை மாவட்டங்களிலும்,
புதுச்சேரி பகுதிகளில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனையடுத்து, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். அதேபோல, காரைக்கால் மாவட்டத்துக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ. 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது