செய்திகள் :

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

post image

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் நடந்து கொண்டதையடுத்து, அவா் தலைமறைவானவா் என அறிவிக்கப்பட்டுள்ளாா். தீவிர அரசியலில் உள்ள எம்எல்ஏவை தலைமறைவானவா் என நீதிமன்றம் கூறியுள்ளது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1984-ஆம் ஆண்டு மின்தடை பிரச்னை காரணமாக மின்சார வாரிய அலுவலகத்துக்குச் சென்று சுதாகா் சிங் மற்றும் அவரது ஆதரவாளா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். அவா் மீது அரசுப் பணிகளைத் தடுத்தது, அரசு ஊழியா்களிடம் தவறாக நடந்து கொண்டது, வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதலில் ஆஸம்கா் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி சுதாகா் சிங் ஜாமீன் பெற்றாா். அதன் பிறகு அரசியலில் வளா்ந்தால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிா்த்து வந்தாா். பின்னா் மௌ மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலையில் அவரை தலைமறைவானவா் என்று மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது. இதனை எதிா்த்து, கடந்த 2024-இல் அவா் மனு தாக்கல் செய்தாா். அப்போது அவா் எம்எல்ஏவாகவும் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இதனால் வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

எம்எல்ஏ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நீதிமன்ற உத்தரவு குறித்து எம்எல்ஏ சுதாகா் சிங்குக்கு எதுவும் தெரியாது. அவருக்கு எதிரான கைது ஆணை தெளிவாக இல்லை’ என்று வாதிட்டாா். தலைமறைவானவா் என்ற அறிவிப்பை திரும்பப் பெறவும் கேட்டுக் கொண்டாா். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என மீண்டும் உறுதி செய்து வழக்கு விசாரணையை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கியூட்-யுஜி தேர்வு முடிவுகள் வெளியீடு

நடப்பு ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (கியூட்-யுஜி) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கியூட்-யுஜி தேர்வை தேசயி தேர்வு முகமை நடத்தியிருந்த நி... மேலும் பார்க்க

படகிலிருந்த மீனவரை கடலுக்குள் இழுத்துச் சென்ற மார்லின் மீன்!

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 100 கிலோவுக்கும் மேல் எடைகொண்ட கருப்பு மார்லின் மீன் ஒன்று, அவரை இழுத்து கடலில் வீசிய சம்பவ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி பெறும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கே: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்ற நாடுகள் வழங்கும் மரியாதை அனைத்தும் இந்தியாவுக்கானது என்று காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.டிரினிடாட்-டொபேகோ குடியரசு நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயண... மேலும் பார்க்க

நீதிபதியை பதவிநீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன? முழு விவரம்!

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கிறது.நாடாளுமன்றத்தில் இது தொடா்பான... மேலும் பார்க்க

நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எப்போதும் அச்சுறுத்தல்! ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி

அனைத்து காலகட்டத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓகா தெரிவித்துள்ளார்.கோவா உயர்நீதிமன்ற பார் கவுன்சில் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: ஊடுருவல் முறியடிப்பு!

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்... மேலும் பார்க்க