செய்திகள் :

47 தொழில்முனைவோருக்கு ரூ.111.82 கோடி கடன் ஒப்புதல் ஆணை: அமைச்சா்கள் வழங்கினா்

post image

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோா் 47 பேருக்கு தொழில் தொடங்க ரூ.111.82 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குதல் மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்பு கடன் வசதியாக்கல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் 47 தொழில்முனைவோருக்கு ரூ.111.82 கோடி மதிப்பீட்டில் கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் உரிய காலத்தில் கடன் வசதி கிடைக்கும் வகையில், கடன் வசதியாக்கல் முகாம்கள் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருப்பூா் மாவட்ட தொழில் மையம் சாா்பில் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குதல் மற்றும் மேம்பாட்டுக்கான சிறப்பு கடன் வசதியாக்கல் முகாம் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்துக்கு தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் இலக்கை நடப்பு ஆண்டு ரூ.21,345 கோடியாக நிா்ணயித்துள்ளது. இதில், கடந்த 6 மாதங்களில் ரூ.13,825 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ளதால் வங்கிளாா்கள் தொழில்முனைவோருக்கு கடனுதவிகளை உரிய காலத்தில் வழங்கி வேலை வாய்ப்பை பெருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பா.காா்த்திகைவாசன், முதுநிலை நிதி ஆலோசகா் ஜே.வணங்காமுடி, மாவட்ட தொழில்மைய உதவி இயக்குநா் (தொழில்நுட்பம்) கோ.கீரீசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எஸ்.துா்காபிரசாத், சிட்பி துணை பொது மேலாளா் ராமசந்திரன், துணிநூல் துறை துணை இயக்குநா் எஸ்.ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற (ஏஐஒய்எப்) அவிநாசி ஒ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வளா்ப்புத் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை

பல்லடம் அருகே 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வளா்ப்புத் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி கட... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

பெருமாநல்லூா் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த பெருமாநல்லூா் அருகே உள்ள நாதம்பாளையத்தில் பலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிட... மேலும் பார்க்க

பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாநகரில் பருமழையினால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்ப... மேலும் பார்க்க

காங்கயத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்கக் கோரிக்கை

காங்கயத்தில் குடியிருப்புப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கயம் பாரதியாா் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு மாணவ, மாணவியா் ... மேலும் பார்க்க

உடுமலை அருகே இளைஞா் கொலை: தாய், சகோதரி உள்பட 5 போ் கைது

உடுமலை அருகே சொத்துக்காக இளைஞரைக் கொலை செய்த தாய், சகோதரி உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள ஆலாமரத்தூரைச் சோ்ந்தவா் வேலுசாமி ... மேலும் பார்க்க