தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
48 நாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி: மத்திய அரசு
‘2023-24-இல் 48 நாடுகளில் இருந்து இந்தியா தங்கம் இறக்குமதி செய்தது. தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெவ்வேறு இறக்குமதி வரிகள் விதிக்கப்படுகின்றன’ என மாநிலங்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மிகவும் விருப்பத்துக்குரிய நாடு அல்லது தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் (எஃப்டிஏ) தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை இந்தியா விதிக்கிறது.
மிகவும் விருப்பத்துக்குரிய நாடு அடிப்படையில் தங்கக் கட்டிகள் மீது 6 சதவீதமும், சுத்திகரிக்கப்படாத தங்கத்தின் மீது 5.35 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. 2023-24-இல் 48 நாடுகளில் இருந்து இந்தியா தங்கம் இறக்குமதி செய்தது. உள்நாட்டு தேவைகள், பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில்கொண்டு தங்கத்தின் மீதான வரியை குறைப்பது குறித்து பிற நாடுகளுடனான எஃப்டிஏ ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
ஆசியான் கூட்டமைப்பு நாடுகள், தென் கொரியா, ஜப்பான் மற்றும் மலேசியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்தின்கீழ் அந்நாட்டில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் தங்கத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை.