World Chess Championship : குகேஷின் வெற்றியை தீர்மானித்த அந்த ஒரு மூவ்; - தடுமாற...
5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து.... ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்ற நபர்!
மும்பை அருகேயுள்ள தானே நகரில் கடந்த 2019 ஆண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
மும்பை லால்பகதூர் சாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 25 அன்று தனது இருசக்கர வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்த அப்துல்லா முகமது ஹதீஸ் கான் (38) என்பவரை அந்த வழியே வந்த டேங்கர் லாரி மோதியது.
இதில், அப்துல்லா பலத்த காயமடைந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விபத்து நடந்து 5 ஆண்டுகள் கழித்து தானே நகரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கான உரிமைகோரல் தீர்ப்பாயத்தின் கீழ் அவருக்கு இழப்பீடாக ரூ. 26.38 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பாகிஸ்தானில் மொபைல், இணைய சேவைகள் முடக்கம்!
இதில், ரூ. 24,4 லட்சம் அவரது வருவாய் இழப்புக்கான இழப்பீடாகவும், ரூ. 47,729 மருத்துவ உதவிக்காகவும், ரூ. 50,000 காயங்கள் மற்றும் உணவுக்காகவும், மேலும் ரூ. 50,000 அவரது வாழ்க்கை விருப்பங்களை இழந்ததற்காக வழங்கப்படுவதாக அந்தத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
விபத்து நடந்தபோது அப்துல்லாவின் ஆண்டு வருமானம் ரூ. 8.42 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.