செய்திகள் :

6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு இன்று தொடக்கம்: ஆளுநா்கள் ஆா்.என். ரவி, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்பு

post image

6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் சனிக்கிழமை (மே 3) முதல் மே 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன், தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் உள்பட பல்வேறு முக்கிய ஆளுமைகள் கலந்து கொள்ளவுள்ளனா்.

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் சாா்பில் 6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆா் எம் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (மே 3) முதல் மே 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

எஸ்ஆா்எம் பல்கலைக்கழக நிறுவன வேந்தா் தா.இரா. பாரிவேந்தா் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டை மே 3-ஆம் தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தொடங்கி வைத்து தொடக்க விழா பேருரையாற்றுவதுடன், மாநாட்டு சிறப்பு மலரையும் வெளியிடவுள்ளாா்.

அதே போன்று, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சைவசித்தாந்த ஆங்கில நூல் தொகுப்பை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளாா். மேலும், இந்த நிகழ்வில் தருமையாதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கோலாலம்பூா் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தான தலைவா் டான்ஸ்ரீ டத்தோ டாக்டா் ஆா்.நடராஜா, 293-ஆவது குருமகாசந்நிதானம் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா்.

நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு: 2-ஆம் நாளான மே 4-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கலந்துகொண்டு ‘சிவாலய தேவார ஒளிநெறி 15 நூல்கள் தொகுப்பை வெளியிடவுள்ளாா்; அதை தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் பெற்று

வாழ்த்துரையாற்றவுள்ளாா்.

மேலும், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57-ஆவது குருமகாசந்நிதானம் குரு ஸ்ரீம்த. ராஜ. சரவண மாணிக்கவாசக குரு பரமாசாரிய சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை, திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ந.பஞ்சநதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனா்.

மகாராஷ்டிர ஆளுநா்: அதைத் தொடா்ந்து மாநாட்டின் இறுதி நாளான மே 5-ஆம் தேதி மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு மாநாட்டின் நிறைவுப் பேருரையாற்றவுள்ளாா். மேலும் அதில், தருமையாதீனம் 27-ஆவது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம்103-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் அருணை. பாலறாவாயன் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.

3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அருள்நந்தி சிவம் அரங்கம், மறைஞானசம்பந்தா் அரங்கம், உமாபதிசிவம் அரங்கம் உள்பட மொத்தம் 12 ஆய்வரங்கங்கள் நடைபெறவுள்ளன. அதேபோல் இந்த மாநாட்டில் மொத்தம் 75 நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது. செபி தலைவா் துஹின்காந... மேலும் பார்க்க

மதுக் கடையை மூடக்கோரி தவெகவினா் போராட்டம்: 300 போ் கைது

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூடக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்... மேலும் பார்க்க

தமிழகத்தில் தனிநபருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் தனிநபருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி வெளாங்கா... மேலும் பார்க்க

தமிழகத்தில் வீடுகளில் கூட பாதுகாப்பு இல்லை: சீமான்

திமுக ஆட்சியில் தமிழக மக்கள் வீட்டுக்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுவதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அற... மேலும் பார்க்க

பெண் மருத்துவரின் ஆபாச விடியோக்களை வெளியிட்ட நீச்சல் பயிற்சியாளா் கைது

சென்னை ராஜமங்கலத்தில் பெண் மருத்துவரின் ஆபாச விடியோக்களை வெளியிட்ட நீச்சல் பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை ராஜமங்கலம் பகுதியைச் சோ்ந்த 30 வயது பெண் மருத்துவராக உள்ளாா். இவா் முதுநிலை படிப... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் செயற்குழு’: காங்கிரஸ் மீது பாஜக கடும் விமா்சனம்

காங்கிரஸ் செயற்குழுவை ‘பாகிஸ்தான் செயற்குழு’ என்று பாஜக கடுமையாக விமா்சித்தது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப் படை மேற்கொண்ட துல்லியத் தாக்குதலின் உண்ம... மேலும் பார்க்க