செய்திகள் :

6 நாள்களுக்குப் பிறகு நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்

post image

6 நாள்களுக்குப் பிறகு, நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கப்பட்டது.

நாக்பூரில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து, கோட்வாலி, கணேஷ்பேத், தேஷில், லகட்கஞ்ச், பச்பாலி, சாந்தி நகர், சக்கர்தாரா, நந்தன்வன், இமாம்பாடா, யசோதரா நகர் மற்றும் கபில் நகர் காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மார்ச் 20ஆம் தேதி நந்தன்வன் மற்றும் கபில் நகர் காவல் நிலையப் பகுதிகளிலும், மார்ச் 22 அன்று பச்பாலி, சாந்தி நகர், லகட்கஞ்ச், சக்கர்தாரா மற்றும் இமாம்பாடா பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டது.

நாக்பூர் காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் ஞாயிற்றுக்கிழமை மீதமுள்ள கோட்வாலி, தேஷில், கணேஷ்பேத் மற்றும் யசோதரா நகர் காவல் நிலையப் பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் ஊரடங்கு உத்தரவை நீக்க உத்தரவிட்டார். அதேசமயம் உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன், பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வலியுறுத்தி முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸின் சொந்த ஊரான மத்திய நாக்பூரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மார்ச் 17 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் சிறுபான்மை சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு அமைப்புகளுக்கு இடையிலான மோதல் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனைத் தடுக்க வந்த காவல் துறையினர் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களைத் தடியடி நடத்தி காவல் துறையினர் கலைத்தனர்.

இதில், காவலர்கள் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றம்

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான உத்தரவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் அதிகாரப்... மேலும் பார்க்க

உ.பி. : மாணவியர் விடுதியில் தீ விபத்து; சிறுமி காயம்

கிரேட்டர் நொய்டாவில் மாணவியர் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிறுமி காயமடைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பெண்கள் விடுதியில் வியாழக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் க... மேலும் பார்க்க

சுதந்திரத்தைப் பாதுகாத்த நமது தியாகிகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்: பிரியங்கா

தியாகிகள் செய்த தியாகங்கள் இன்று நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக வயநாடு வந்துள்ள பிரியங்க... மேலும் பார்க்க

காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத்: ஏப்ரல் 19-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து இதனை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப... மேலும் பார்க்க

முகலாய அரசர்களின் பெயரில் சாலைகளா? கருப்பு மை பூசி அழித்த புத்த மத அமைப்பினர்!

தில்லியில் முகலாயர்கள் மற்றும் சுல்தான் ஆட்சியாளர்களின் பெயர்களைக் கொண்ட சாலைகளின் பெயர்ப் பலகைகளில் புத்த மத அமைப்பினர் கருப்பு மை பூசி அழித்தனர். புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் எல்லைக்குட்பட்ட பக... மேலும் பார்க்க