மோகன்லாலுக்கே பாதுகாப்பு இல்லை... பாஜகவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்துவதற்கு ஒப்பதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 1ஆம் தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வால் சுமார் 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே - ஆர்சிபி மோதல்: ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 6,614 கோடி கூடுதல் செலவாகும் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3 சதவீத உயா்வு மூலம் அகவிலைப்படி 53 சதவீதமாக உள்ள நிலையில், தற்போதைய உயா்வு மூலம் அகவிலைப்படி 55 சதவீதமாக உயர உள்ளது.
6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியா்களுக்கு அவா்களின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிட்டு அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.