செய்திகள் :

விஜய் ஊடக வெளிச்சத்திற்காகப் பேசுகிறார்: அண்ணாமலை

post image

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விஜய்யை விமர்சித்துப் பேசியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தில்லி சென்றார்.

அங்கு அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்த அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

தேர்தல் கூட்டணி மற்றும் அமித்ஷாவுடனான சந்திப்பு பற்றியும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “பாஜக மாநில தலைவராக எனது கருத்தை கட்சியின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன். கூட்டணி பற்றி பேச இன்னும் நிறைய காலம் இருக்கிறது. பாஜக யாருடன் கூட்டணி என்பது பற்றி இப்போது பேசத் தேவையில்லை. எனக்கு கூட்டணி பற்றி தனிப்பட்ட கருத்து இல்லை.

கட்சிதான் எனக்கு முக்கியம். கட்சியை வலிமைப்படுத்தவே உழைக்கிறேன். பாஜக தேசியத் தலைவர் தேர்தல், மாநிலத் தலைவர் தேர்தல் ஆகியவை விரைவில் நடைபெறவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

விஜய், ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த அண்ணாமலை

இன்று நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசினார். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய அண்ணாமலை, "அரசியலைப் பொறுத்தவரை சக்தி வாய்ந்த ஒருவரைப் பற்றிப் பேசினால்தான் ஊடக வெளிச்சம் கிடைக்கும். ராகுல் காந்தியைப் பற்றிப் பேசினால் அது கிடைக்குமா? அதனால்தான், விஜய் பிரதமர் மோடி பற்றிப் பேசுகிறார்.

கட்சி தொடங்கி விஜய் எத்தனை முறை வெளியே வந்தார்? எத்தனை முறை மக்களை சந்தித்தார்? மைக் பிடித்து பேசிவிட்டு அடுத்தவரைக் கை காட்டுவது மட்டுமே அரசியல் அல்ல. களத்திற்கு வந்து வேலை செய்யவேண்டும். நான் களத்தில் வேலை செய்து வருகிறேன்” என்றார்.

தவெக கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா அண்ணாமலையை விமர்சித்துப் பேசியிருந்தார். அதுபற்றிப் பேசிய அண்ணாமலை, “திமுகவுக்கு வேலை பார்த்த ஒருவர் அடுத்து விசிகவுக்குத் தாவினார். லாட்டரி பணத்தை வைத்து அடுத்து விஜய் கட்சிக்குத் தாவியிருக்கிறார். அவருடைய எண்ணம் என்னவென்றால் தமிழக வெற்றிக் கழகத்தை ‘லாட்டரி விற்பனைக் கழகம்’ என்று மாற்றவேண்டும் என்பதே. அவர் இன்று என்னைப் பற்றி குறை சொல்கிறார்” என்று பேசினார்.

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பு பற்றி விஜய் வைத்த விமர்சனத்திற்கு பதிலளித்த அண்ணாமலை, “1973-ல் தொகுதி மறுசீரமைப்பு நடந்தபோது, இந்தியாவின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 525-ல் இருந்து 545 ஆக உயர்த்தப்பட்டன. 20 இடங்கள் கூடுதலாக்கப்பட்டபோது தமிழகத்திற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

அப்போது தமிழ்நாட்டில் திமுகவும், மத்தியில் காங்கிரஸும் ஆட்சியில் இருந்தன. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கருணாநிதி தமிழ்நாட்டிற்கென எதையும் வாங்கவில்லை. இதற்கு, விஜய் காங்கிரஸ் மற்றும் திமுக மீதுதான் குற்றம் சாட்ட வேண்டும்.

அடுத்து 2026-ல் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு தொகுதி குறைவாகக் கிடைத்தால் பத்திரிகையாளர்கள் அப்போது என்னிடம் கேளுங்கள். விஜய் அரசியல் புரிதலோடு பேச வேண்டும்” என்றார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ்

ரெட் ஜெயண்ட் நிறுவனக்கும் விஜய்க்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசிய அவர், “மீடியாவை தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு குருவி படத்தின் மூலம் திறப்பு விழா நடத்தியதே விஜய்தான். அவருடைய பீஸ்ட் போன்ற படங்களின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை அந்த நிறுவனமே பார்த்துக் கொண்டது.

திமுகவுடன் பாஜகவை இணைத்து விமர்சிக்கும் முன்பு விஜய் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிக்க | நேற்று வந்தவன்! முதல்வர், பிரதமர் பெயர்களைச் சொன்ன தவெக தலைவர் விஜய்!

சுய உதவிக் குழுவில் கனவு இல்லத் திட்ட பெண் பயனாளிகள்: உறுதி செய்ய அரசு உத்தரவு

சென்னை: ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தைச் சோ்ந்த பெண் பயனாளிகள், சுய உதவிக் குழுக்களில் இணைந்து பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமல்

சென்னை: தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்ட... மேலும் பார்க்க

பிரதமா் வருகை தரும் ஏப்.6-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: பிரதமா் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவித்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெள... மேலும் பார்க்க

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: ஆயத்த பணிகளில் சுகாதாரத் துறை

சென்னை: தமிழகம் முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. கருப்பை வாய... மேலும் பார்க்க

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவுமுதல் அமல்!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று(மார்ச் 31) நள்ளிரவு 12 மணிமுதல் சுங்கக் கட்டண உயர்வு அமலாகவுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்.1, செப்.1 ஆகிய தேதிகளில் சுங்கக்கட்டணத்தை மாற்றி அமைப்பது வழ... மேலும் பார்க்க