சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: 18 நாள்கள் திறந்திருக்கும்!
சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது; அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் பூரன்!
சிக்ஸர் அடிக்க திட்டமிடுவது கிடையாது என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ரன்கள் (6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) எடுத்து அசத்தினார்.
சிக்ஸர் அடிக்க திட்டமிடுவதில்லை
ஹைதராபாதுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், சிக்ஸர் அடிக்க திட்டமிடுவதில்லை என லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: எம்.எஸ்.தோனியின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் இப்படி நினைப்பது சரியா? அம்பத்தி ராயுடு சொல்வதென்ன?
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை பெறுவது சிறப்பான உணர்வைத் தருகிறது. சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என திட்டமிட்டு நான் விளையாடுவதில்லை. பந்தினை சிறப்பாக டைமிங் செய்து விளையாடவே எப்போதும் முயற்சிக்கிறேன். போட்டிகளின்போது, என்னுடைய திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். ஆடுகளம் சிறப்பானதாக இருந்தது.
ஒவ்வொரு முறை ஹைதராபாதுக்கு வரும்போதும் அதிக ரன்கள் குவிக்கும் போட்டியாக அமைகிறது. பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால், உங்களால் அதிரடியாக விளையாட முடியும். பேட்டினை வேகமாக சுழற்ற நான் எந்த ஒரு பயிற்சியும் மேற்கொள்வதில்லை. பேட்டினை வேகமாக சுழற்றும் அசாத்திய திறன் எனக்கு இயல்பாகவே இருக்கிறது. இது மிகவும் நீண்ட தொடர். மிட்செல் மார்ஷ் மிகவும் அற்புதமாக விளையாடினார் என்றார்.