ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் பதிரானா!
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சிஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஆர்சிபி முதலில் பேட் செய்கிறது.
சிஎஸ்கேவில் நாதன் எல்லிஸுக்குப் பதில் பிளேயிங் லெவனில் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்சிபியில் புவனேஷ்குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.