செய்திகள் :

6 மாநிலங்களவை இடங்களுக்கு டிச.20-இல் இடைத்தோ்தல்

post image

ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம், ஹரியாணா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு டிசம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த வெங்கடரமணா ராவ் மோபிதேவி, பீடா மஸ்தான் ராவ் யாதவ், ஆா்.கிருஷ்ணய்யா ஆகியோா், கட்சித் தலைமை மீதான அதிருப்தியால் கடந்த ஆகஸ்டில் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா்.

இவா்களில் மோபிதேவியின் பதவிக் காலம் 2026, ஜூன் மாதத்திலும், மற்ற இருவரின் பதவிக் காலம் 2028, ஜூன் மாதத்திலும் நிறைவடையவிருந்தது.

இதேபோல், ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சுஜீத் குமாா், கட்சியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ஜவஹா் சிா்காா் பதவி விலகினாா். இந்த இருவரின் பதவிக் காலமும் 2026, ஏப்ரல் வரை இருந்தது.

ஹரியாணாவில் பாஜக மாநிலங்களவை எம்.பி.யாக கிருஷண் லால் பன்வாா், அங்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால், தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இந்த 6 பேரின் ராஜிநாமாவால் காலியான இடங்களுக்கு டிசம்பா் 20-ஆம் தேதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலுடன் ஆந்திரம், ஒடிஸா பேரவைகளுக்கும் தோ்தல் நடைபெற்றது. இதில் முறையே தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றன. ஹரியாணாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.

கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரசு தகவல்

கடன் வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் அடுத்த மூன்று- நான்கு மாதங்களில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதிச்சேவை செயலாளர் எம்.நாகராஜு தெரிவித்தார்.இது தொடர்பாக இந்திய தொழில் க... மேலும் பார்க்க

அசோக் கெலாட்டின் உதவியாளரை காவலில் வைத்து விசாரிக்க முடிவு: தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு

தில்லி காவல்துறையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் முன்னாள் சிறப்புப் பணி அலுவலர் லோகேஷ் சர்மாவை காவலில் வைத்து விசாரிக்க அனும... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சுவாரஸ்ய நிமிஷங்கள்...

அரசமைப்பு தினத்தையொட்டி பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றும் முன்பு மைய மண்டபத்தில் சுவாரஸ்யமான சில சந்திப்புகளை... மேலும் பார்க்க

பொது வாழ்வில் உள்ளவர் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்: சி.வி.சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம்

நமது நிருபர்"பொது வாழ்வில் உள்ளவர் நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்' என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு பேரிடர் நிதி ரூ.50 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

நமது சிறப்பு நிருபர்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு நிலச்சரிவால் ஏற்படும் ஆபத்து தணிப்புகளுக்காக ரூ. 1,000 கோடியை முன்மொழிந்து ஒப்புதல் ... மேலும் பார்க்க

உ.பி. கும்பமேளா: முதன்முறையாக தீயணைப்பு பணியில் ரோபோக்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளாவில் முதன்முறையாக தீயணைப்புப் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிக... மேலும் பார்க்க