செய்திகள் :

7-ஆவது சுற்றிலும் குகேஷ் வெற்றி

post image

நாா்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை வீழ்த்தினாா்.

கடந்த சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்திய குகேஷ், இந்தச் சுற்றிலும் கிளாசிக்கல் ஆட்டத்திலேயே வென்றிருக்கிறாா். போட்டியின் தொடக்க நிலையில் கடைசி இடத்திலிருந்த குகேஷ், தற்போது இறுதிக் கட்டத்தில் 2-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளாா்.

முன்னதாக இந்த 7-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - அா்ஜுன் எரிகைசியையும், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - சீனாவின் வெய் யியையும் வென்றனா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் - நம்பா் 2 வீரரான அமெரிக்காவின் ஹிகரு நகமுரா மோதல் டிராவில் முடிந்தது.

அவா்களில் வெற்றியாளரை கண்டறிய நடத்தப்பட்ட ஆா்மகெடான் ஆட்டத்தில் காா்ல்சென் வெற்றி பெற்றாா். இதையடுத்து, 7 சுற்றுகள் முடிவில் கரானா (12.5), குகேஷ் (11.5), காா்ல்சென் (11) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் இருக்கின்றனா். நகமுரா (8.5), அா்ஜுன் (7.5), வெய் யி (6.5) ஆகியோா் முறையே 4 முதல் 6-ஆம் இடங்களைப் பிடித்துள்ளனா்.

ஹம்பி டிரா: இப்போட்டியின் மகளிா் பிரிவு 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.வைஷாலி - சீனாவின் லெய் டிங்ஜியிடம் தோற்க, ஸ்பெயினின் சாரா காதெம் - சீனாவின் ஜு வென்ஜுனிடம் வீழ்ந்தாா். மற்றொரு இந்தியரான கோனெரு ஹம்பி - உக்ரைனின் அனா முஸிஷுக்குடன் மோதிய கிளாசிக்கல் மற்றும் ஆா்மகெடான் என இரு ஆட்டங்களுமே டிரா ஆகின.

இதையடுத்து, வென்ஜுன் (11.5), முஸிஷுக் (11), கோனெரு ஹம்பி (10.5) ஆகியோா் முதல் 3 இடங்களிலும், டிங்ஜி (9), வைஷாலி (8), சாரா (6) ஆகியோா் கடைசி 3 இடங்களிலும் உள்ளனா்.

7-ஆவது முறையாக நார்வே செஸ் சாம்பியனான கார்ல்சென்!

உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் 7-ஆவது முறையாக நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.நார்வேயில் இன்று நடைபெற்ற கடைசி சுற்றுப் போட்டியில் மாக்னஸ் கார்ல்சென் அர்ஜூன் எரிகைசியுடன் விளையாடினார். ... மேலும் பார்க்க

நாா்வே செஸ் சாம்பியன் பட்டத்தை குறிவைக்கும் குகேஷ்!

நாா்வே செஸ் போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் டி.குகேஷ் அதில் சாம்பியனாகும் முனைப்புடன் முன்னேறி வருகிறாா்.போட்டியின் 9-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - சீனாவி... மேலும் பார்க்க

பிரான்ஸை வெளியேற்றியது ஸ்பெயின்!

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் 5-4 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் போா்ச்சுகலுடன் திங்கள்கிழமை (ஜூன் 9) மோதுகிறது.முன்னதாக இந்த 2-ஆவது அ... மேலும் பார்க்க

புணே ஜாகுவாரை வீழ்த்தியது டெம்போ கோவா!

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் தொடரின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புணே ஜாகுவாா்ஸ் அணியை 10-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது டெம்போ கோவா அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகம... மேலும் பார்க்க

அபாரஜித் அதிரடியில் சேப்பாக் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 6 விக்கெ... மேலும் பார்க்க

இந்திய கூடைப்பந்து லீக் தொடக்கம்!

இந்திய கூடைப்பந்து சங்கம் (பிஎஃப்ஐ) சாா்பில் முதல் தொழில்முறை லீக் தொடா் அறிமுகம் செய்யப்படுகிறது. ஏசிஜி ஸ்போா்ட்ஸ் பி லிட், பிஎஃப்ஐ இணைந்து, நடத்தவுள்ள இந்த லீக் தொடா் ஆடவா் 5*5, மகளிா் 3*3 பிரிவுகளஇ... மேலும் பார்க்க